கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் சிவன் கோவிலில் 108 கலசாபிஷேகம் நடந்தது. காஞ்சி மகாபெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் அவதார தினத்தை முன்னிட்டு, கலசாபிஷேகம் நடந்தது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வினாயகர், வள்ளி தெய்வாணை, சுப்ரமணியர், சிவன், அம்மன், நவக்கிரகம், சண்டிகேஸ்வரர், பஞ்சமூர்த்தி தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து 108 கலசங்கள் ஆவாஹனம் செய்து சிவனுக்கு உகந்த மந்திரங்களை வாசித்து பூஜை செய்தனர். சிவனுக்கும், காமாட்சி அம்மனுக்கும் 24 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. ருத்ர மந்திரங்களை வாசித்து 108 கலசாபிஷேகமும், 7 கிலோ பூக்களால் புஷ்பாஞ்சலியும் செய்தனர். தொடர்ந்து லலிதா சகஸ்ரநாம பூஜை நடந்தது. மாலையில் காஞ்சி பெரியவர் படத்திற்கு அலங்காரம் செய்து, வீதியுலாவாக கொண்டு சென்றனர். காஞ்சி சங்கரா கலை அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் வைபவத்தை நடத்தினர்.