கருப்பட்டி:சோழவந்தான் அருகே கருப்பட்டியில் கணேசபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.முதல் நாள் யாகசாலையில் புனிநீர் குடங்கள் வைத்து பூஜைகள் நடந்தன. நேற்றுக்காலை திருப்பணிக்குழுவினர் புனிதநீர் குடங்களை சுமந்து கோயிலுக்கு வந்தனர். சிவாச்சாரியார்கள் கல்யாணராமன், கண்ணன் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தன. வாடிப்பட்டி யூனியன் தலைவர் அன்னக்களஞ்சியம், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் தங்கப்பாண்டி, ஒன்றிய கவுன்லர்கள் நாகம்மாள், லட்சுமி, ஊராட்சித் தலைவர் சாந்தி பங்கேற்றனர்.