பதிவு செய்த நாள்
21
மே
2013
10:05
பழநி: பழநியில் அக்னி நட்சத்திர விழா சித்திரை கழுவு நிறைவு பெறுவதால், மலைக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். அக்னி நட்சத்திரம் காலகட்டமான சித்திரையின் பின் 7 நாட்கள், வைகாசியில் முன் 7 நாட்களை, "சித்திரை கழுவு என அழைக்கின்றனர். இந்த நாட்களில் பழநிகோயிலில் கிரிவலம் வருவது சிறப்பாகும். கிரிவலப் பாதையிலுள்ள கடம்ப மரத்திலிருந்து, வீசும் சஞ்சீவி மூலிகை காற்று, சகல நோய்களை, தீர்க்க வல்லது என்ற ஜதீகம் உள்ளது. இதன் காரணமாக, கிரிவீதியில் உள்ள கடம்ப மரத்தில் பூத்து குலுங்கும் பூவையும், இலைகளையும், பெண்கள் தங்களது தலையில் சூடிக் கொண்டும், வாசனை பத்தியை கையில் ஏந்தியபடி மலையை கிரிவலம் வருகின்றனர். சேலம், ஈரோடு, பொள்ளாச்சி, கோவை, பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மாட்டு வண்டியில் பழநி வந்துள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு மேல், ஒருதரப்பினர் கிரிவலம் வந்து, பின் மலைக்கோயிலில் ராஜ அலங்காரத்தில் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்வார்கள்.