Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
29 ஆண்டுகளாக திறக்கப்படாத ஆஞ்சநேயர் ... பழநியில் அக்னி நட்சத்திர விழா: சித்திரை கழுவு நிறைவு! பழநியில் அக்னி நட்சத்திர விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் குறையவில்லை பக்தர்கள் கூட்டம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 மே
2013
10:05

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, அண்டை மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் திருமலைக்கு வருவது வழக்கம். கோடை விடுமுறை துவங்கிவிட்ட நிலையில், ஏழுமலையான் தரிசனத்திற்கு பக்தர்கள் கூட்டம் திருமலையில் குவிந்து வருகிறது. வியாழக்கிழமை தொடங்கிய கூட்ட நெரிசல், ஞாயிற்றுக் கிழமை வரை தொடர்ந்தது.

ஞாயிற்றுக்கிழமை முழுவதும், 82,064 பேர், ஏழுமலையானை தரிசனம் செய்தனர். திங்கட்கிழமை அதிகாலை, 3:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, 35 ஆயிரம் பேர், ஏழுமலையானை தரிசித்தனர். தரும தரிசனத்திற்கு, நான்கு மணி நேரமும், திவ்ய தரிசனத்திற்கு, (பாதயாத்திரை பக்தர்கள்), மூன்று மணி நேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு, இரண்டு மணி நேரமும் ஆனது. பரிணய உற்சவம்: திருமலையில், ஸ்ரீநிவாசன் - பத்மாவதி பரிணய உற்சவம், ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. வைகாசி மாத, தசமி தினத்திற்கு முன்னும், பின்னுமாக, மூன்று நாட்கள், இந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்நாட்களில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, நான்கு மாட வீதிகளில் வலம் வந்து, நாராயணகிரி உற்சவ வனத்தை அடைவார். அங்கு, பூப்பந்து, புது வஸ்திரம் சமர்ப்பித்தல் முதலியவை நடந்த பிறகு, பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அப்போது, திருமலையில், வாண வேடிக்கை நடத்தப்படும். முதல் நாள், யானை வாகனத்திலும், இரண்டாம் நாள், குதிரை வாகனத்திலும், மூன்றாம் நாள், கருட வாகனத்திலும் மலையப்ப சுவாமி காட்சியளிப்பார். இந்த உற்சவத்திற்காக, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சஹஸ்ர தீபாலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டன.

பிரம்மோற்சவம்: திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவம், இம்மாதம், 17ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. பிரம்மோற்சவத்தின் ஒவ்வொரு நாளும், காலையும், மாலையும், பல்வேறு அவதாரத்தில் வித விதமான வாகனங்களில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமி, மாட வீதிகளில் உலா வருவார். விழாவின் நான்காம் நாளான திங்கட்கிழமை காலை, கல்பவிருட்சு வாகனத்திலும், இரவு சப்த பூபாள வாகனத்திலும், கோவிந்தராஜ சுவாமி வலம் வந்தார்.

ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி!: திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்தின் மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய் என, திருப்பதி தேவஸ்தான நிதி நிபுணர்கள் குழு கணக்கிட்டுள்ளது. திருப்பதி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இதை நெறிமுறைப்படுத்த, திருமலை - திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி. சுப்ரமணியன், சில நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறார். 2009ம் ஆண்டு நிலவரப்படி, வருவாய்ப் பிரிவு மேலதிகாரி, ராமச்சந்திர ரெட்டி, நாடு முழுவதும் மற்றும் பிற நாடுகளில் திருப்பதி கோவிலுக்கு சொந்தமாக உள்ள நிலங்கள் குறித்து, ஒரு ஆண்டு காலம் கணக்கிட்டு, 4,143 ஏக்கர் உள்ளதாக பதிவு செய்தார். இந்த அசையா சொத்துகளின் அப்போதையை மதிப்பு, 34.4 ஆயிரம் கோடி ரூபாய். இவற்றில் ஆந்திராவில் உள்ள அசையா சொத்து மதிப்பு, 33.1 ஆயிரம் கோடி ரூபாய்; அண்டை மாநிலங்களில், உள்ள அசையா சொத்து மதிப்பு, 298.59 கோடி ரூபாய். இந்த கணக்கீடு நடந்த, 2009 ஆண்டிற்குப் பிறகும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் நிலங்களை, திருப்பதி கோவிலுக்கு நன்கொடையாக அளித்துள்ளனர். அரசு விலை நிர்ணயம், ஒரு புறம் இருப்பினும், திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ள அசையா சொத்துகளின் மதிப்பு, இப்போதைய சந்தை நிலவரப்படி, ஒரு லட்சம் கோடி ரூபாய் என, நிதி நிபுணர்கள் குழு கணக்கிட்டுள்ளது. இந்நிலையில், மாநில அளவில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும், நிலங்களின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திருப்பதி தேவஸ்தானமும், சிறிய கிராமம் முதல், தலைநகரம் வரை, தியான மண்டபங்கள், கல்யாண மண்டபங்கள், கோவில்கள் கட்டி தர்ம காரியங்களைச் செய்து வருகிறது. அவற்றைக் கட்ட, தேவஸ்தானத்திற்கு கூடுதல் நிலங்கள் தேவைப்படுகின்றன.

அறப்பணிகள் பல...: தேவஸ்தானம் கேட்காமலேயே, பக்தர்கள் பலர், தங்கள் நிலங்களை, நன்கொடையாக அளித்து வருகின்றனர். அன்ன தானம், உயிர் காக்கும் மருத்துவம், கோ-சாலை திட்டங்களுக்கு நன்கொடை அளிக்க, தனித்தனியாக அறக்கட்டளைகளை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது. அது போல், நிலங்களை நன்கொடையாக அளிக்கவும், தனி அறக்கட்டளையை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அறக்கட்டளையை ஏற்பாடு செய்து, பக்தர்களை அணுகினால், அதிகளவில் நிலங்கள், தானமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது என, தேவஸ்தானம் கருதுகிறது. அதனால், "பூதேவி, பிருத்வி, சப்தகிரி என்ற, மூன்று பெயர்களில் ஒன்றை, புதிய அறக்கட்டளைக்கு கட்ட முடிவு செய்துள்ளது. ஜீயர்கள், அர்ச்சகர்கள், ஆகம பண்டிதர்கள் ஆகியோரைக் கலந்தாலோசித்த பின், அறக்கட்டளையின் பெயர் தீர்மானிக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூரில் 400 ஆண்டுகள் பழமையான கரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; தமிழகம் கோயில்களின் நகரமாக திகழ்கிறது என நீண்ட தூர சைக்கிள் பயணம் மேற்கொண்டதாக கின்னஸ் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செப்பை சங்கீத உற்சவம் இன்று துவங்குகிறது.கேரள மாநிலத்தில் ... மேலும்
 
temple news
மைசூரு; கெல்லஹள்ளி கிராமத்தில் உள்ள அய்யப்ப பக்தர்கள், கொதிக்கும் எண்ணெயில் கை விட்டு அதிரசத்தை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தரநாயகி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar