பதிவு செய்த நாள்
21
மே
2013
10:05
சிவகங்கை: மானாமதுரையில், சதாசிவ பிரம்மேந்த்ராள் 33ம் ஆண்டு ஆராதனை நிறைவு விழா நேற்று நடந்தது. மானாமதுரையில், மே 18ல் காலை தெய்வீக பேரவை சொற்பொழிவுடன், சதாசிவ பிரம்மேந்த்ராள் 33ம் ஆண்டு ஆராதனை விழா துவங்கியது. விழாவை முன்னிட்டு முதல் நாளில் பாட்டு, லயவின்யாசம் நடந்தது. இரண்டாம் நாளான்று, பூஜை, உஞ்சவ்ருத்தி, தீபாராதனை, பாட்டு நிகழ்ச்சி நடந்தது. திவ்யநாம ஸங்கீர்த்தனம் நடந்தது. நிறைவு நாளான நேற்று, காலை 7 மணிக்கு, சிறப்பு பூஜை, உஞ்சவ்ருத்தி பூஜை நடந்தது. காலை 9 மணிக்கு, குருஅஞ்சலி, கோஷ்டிகானம், விக்னேஸ்வர பூஜை, வடுக பூஜை, கன்யாபூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜை, ஆராதனை, மகா மங்களாரத்தி நடந்தது. மாலை 6 மணிக்கு ஆஞ்சிநேயர் உத்சவம் நடந்தது. அதை தொடர்ந்து வயலின், மிருதங்கம், கஞ்ஜிரா, கடம், மோர்சிங் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள், ஆராதனை விழாவில் பங்கேற்றனர். சங்க தலைவர் நாராயணசுவாமி, துணை தலைவர்கள் ஜவஹர், ராமய்யா, முருகேசன், செயலாளர்கள் முரளி, வைத்யநாதன், பொருளாளர் ஸ்ரீவித்யா ராஜகோபாலன், சிவகங்கை வக்கீல் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.