திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, ஒண்டிக்குப்பம், மணவாள நகர் கெங்கைஅம்மன் கோவிலில், 58ம் ஆண்டு ஜாத்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காப்பு கட்டுதலும் நடைபெற்றது. விழாவின் மூன்றாவது நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு அபிஷேகமும், 8:00 மணிக்கு கூழ் வார்த்தலும், பகல், 12:00 மணிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை வாணவேடிக்கையும், இரவு அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.