Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் கோவிலில் தேரோட்டம் ... கெங்கை அம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா! கெங்கை அம்மன் கோவிலில் ஜாத்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரசிம்மரை எந்த நேரத்தில் வழிபட வேண்டும்?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 மே
2013
10:05

நரசிம்மரின் மகிமை: காளிதாசன் தமது  என்ற நூலில், தமது சாமர்த்தியத்தால் சிறந்த புருஷனான ஸ்ரீநரசிம்மர் நான்கு காரியங்களைச் சாதித்தார் என்று வர்ணிக்கிறார். 1. பிரகலாதனின் கவலையை நீக்கியது, 2. அரக்கர்களின் ஆணவத்தை அடக்கியது, 3. தூணைப் பிளந்தது, 4. ஹிரண்யனுடைய மார்பைப் பிளந்தது. நரசிம்ம அவதாரம் உக்கிரமும், மங்களமும் கலந்த மூர்த்தி, பக்தர்களின் எதிரிகளுக்கெல்லாம் எதிரி இந்த மூர்த்தி. வைகுந்தத்தில் நாராயணன் நரசிம்ம ரூபத்திலேயே இருப்பதாக நம்மாழ்வார் குறிப்பிடுகிறார். பேயாழ்வாருக்கும் நரசிம்மபிரானிடம் ஈடுபாடு, ஆதிசங்கரர் தன்  ஸ்தோத் திருப்பாற்கடலிலுள்ள திருமால் நரசிம்மனே என்கிறார். சிவனுக்குள்ள சடைமுடியையும் முக்கண்ணையும் சங்கரர் நரசிம்மத்தினிடமும் கண்டார்.

விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும் விஸ்வம், சிம்ஹா  ப்ரகரணாயுதா ஆகிய வார்த்தைகள் எல்லாம் நரசிம்மத்தையே குறிப்பதாக சங்கரர் தன் பாஷ்யத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.  என்ற உபநிஷத்துக்கு சங்கரர் பாஷ்யம் எழுதினார். ஹிரண்யாக்ஷனின் சகோதரனான ஹிரண்யகசிபு ஹரித்துவேஷி. பரமபக்தனான பிரஹலாதனை ஹிரண்யகசிபுவின் ஹிம்சைகளிலிருந்து காப்பாற்றவே இந்த அவதாரம். இந்தத் தூணில் இருக்கிறானா என்று இறுமாப்புடன் கேட்ட இரணியனுக்கு,

சாணினும் உளன் ஓர் தன்மை அணுவினைச் சதகூறிட்ட
கோணினும் உளன் மாமேருக் குன்றினும் உளன், இந்நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன் இத்தன்மை
காணுதி விரைவின் என்றான் நன்று எனக் கனகன் சொன்னான்.

என்று பால பிரஹலாதன் அளித்த பதிலை மெய்ப்பிக்க வேண்டித் தூணைப் பிளந்து வந்து துஷ்ட ஹிரணியனை சம்ஹரித்த அவதாரம். அக்கிரமத்தை ஒடுக்க வேண்டும் என்றால் உக்கிரம் அவசியம். கொடுமை, தன்னைக் காட்டினும் பெரியதொரு சக்தியால் அழிக்கப்படும் என்பது இந்த அவதாரத்தின் உட்பொருள். முந்திய அவதாரங்களைப் போலல்லாமல் சிங்க முகம், மனித உடல். மனிதத் தன்மைக்கும் மிருகத் தன்மைக்கும் மத்தியிலுள்ள ஒரு நிலை சிங்கம். சிங்கத்தினிடமுள்ள மிருகத் தன்மை, ரோஷம் இவற்றை மனிதனிடமும் காணலாம். ராஜஸ தாமஸாதிகளை ஒடுக்கி, சினத்தை வளர்க்கக்கூடிய உணர்வுகளை விடுத்து, பரம பாவனனான பிரகலாதனைப் போல பக்தியை வளர்த்து, பகவானைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதிலுள்ள ஒரு கருத்து. ஆண்டவன் தனக்குத் தீங்கு செய்தாலும் பொறுப்பான். ஆனால் தனக்கு உயிர்நிலையாக உள்ள அடியவர்களுக்குத் தீங்கு செய்தால் அதைப் பொறுக்க மாட்டான் என்ற உட்பொருளை இந்த அவதாரத்தில் காண்கிறார் திருமங்கையாழ்வார். நம்மாழ்வார்  என்றே அழைக்கிறார்.

ஆடி ஆடி அகம் கரைந்து, இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி, எங்கும்
நாடி நாடி  என்று
வாடி வாடிடும் இவ்வாள் - நுதலே.

ஸ்ரீவேதாந்த தேசிகர் வடமொழியில் இயற்றிய தசாவதார ஸ்தோத்திரத்தில்,  ஏற்பட்ட பாக்கியமே பாக்கியம். திடீரென்று பகவான் தோன்ற வேண்டிய அவசியம் நேர்ந்ததால், அவன் வீட்டுத் தூண் பகவானையே பிரசவிக்கும் பாக்கியம் பெற்றுவிட்டது என்கிறார். நரசிம்மர் ருத்ர அம்சமானவர் என்று சில நூல்கள் கூறுகின்றன. பிரதோஷ காலத்தில் நரசிம்மரை தியானிப்பது மிக விசேஷம். (அவர் அவதாரம் எடுத்தது அப்போதுதானே!) 

பகவான் சொன்னார்:  நீ கூறியபடி நான் தூணில்  இல்லை என்பதை நிஜமாக்க இதுவரை தூணிலிருந்து வெளிவரவில்லை. உன் மகன் உண்டென்று கூறியதைச் சத்தியமாக்க இதோ வந்தேன். மிருக புத்தியால் நீ இல்லை என்றாய்,  மனுஷ்ய புத்தியோடு உன் மகன் உண்டு என்றான். இரண்டு பாவனைக்கும் நான் உட்பட்டவன் என்று காட்டவே இந்த ரூபத்தில் வந்தேன்.

பிரஹலாதன் பால்மணம் மாறாத பாலகன். அவனை என்ன பாடுபடுத்திவிட்டான். அவனுக்காக பகவான் சிங்கத்தின் தலையுடனும் மனித உடலுடனும் தோன்ற வேண்டியிருந்தது. உக்கிர நரசிம்மத்தின் அருகில் செல்ல யாவருக்கும் பயம். பிரகலாதன் தான் அவர் அருகில் சென்றான்.

உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார் நரசிம்மர்.  பூச்சியாகப் பிறக்க நேர்ந்தாலும் உங்கள் பாதங்களில் வற்றாத அன்பிருக்க வேண்டும் என்று கேட்டான் பிரகலாதன்.

நரசிம்ம ஸ்வாமிக்கு உச்சி குளிர்ந்துவிட்டது.  பூதங்கள் (அவை இருக்கும்வரை மட்டுமல்ல) அழிந்த பின்பும் நீ அழியமாட்டாய், என் போல் இரு என்றார். சிங்கபிரான் பெருமை ஆராயுஞ் சீர்மைத்தே என்றார் சடகோபர்.  விழுப்பொருளாக விளங்குவது சிங்க பிரானின் திருவுருவம் அந்த உருவத்தை வணங்குகிறேன் என்ற மந்திரம் உபநிஷத்திலே பிரசித்தி பெற்றது. கம்பனுக்கு நரசிம்மாவதாரத்தில் ஈடுபாடு என்று தெரிகிறது.  செங்கட்சீயம் ஆன நரசிம்மர் கம்பனது ராமாயண அரங்கேற்றத்திற்கு இசைவு கொடுத்தார். அவரைப் பற்றி ராமாயணத்தில் சேர்த்ததற்கு இதுவே காரணம்.

மானுட மடங்கல் எனும் தொடர் திருமாலின் அவதாரங்களில் நரசிம்மாவதாரத்தைக் குறிக்கும். மானுடன் - நரன், மடங்கல் - சிங்கம். குமரகுருபரர் தான் இயற்றிய திருவாரூர் நான்மணி மாலையில் நரசிம்ம மூர்த்தியை நினைவுபடுத்தி இப்படி அழைக்கிறார். தேவர்கள் ஒரு சமயம் சாவு, பாவம், சம்சாரம் ஆகிய மூன்றையும் கண்டு பயந்து நடுங்கி, அவற்றைக் கடப்பதற்கான வழியைக் கூறுமாறு பிரம்மனிடம் முறையிட்டுக் கொண்டார்களாம். அப்போது பிரம்மன் மூன்று நரசிம்ம மந்திரங்களைக் கூறி, அவற்றை ஜபிக்குமாறு கூறினாராம். தேவர்கள் அவ்வாறே செய்து முழுப்பயன் அடைந்தார்கள் என  உபநிஷத் கூறுகிறது.

ஓங்காரமாகிய பிரணவ மந்திரத்துடன் ஸ்ரீலக்ஷ்மீ சுதர்ஸன சக்ர மகா மந்திரங்களையும் சேர்த்து யாகம் செய்வது மிகவும் உயர்ந்தது என்றும் இந்த உபநிஷத் போற்றி உரைக்கின்றது. அசுர சக்தியை ஒடுக்கி இவ்வுலகில் சாத்வீக சக்தியையும் ஆத்ம ஞானத்தையும் பரப்பவல்ல 32 எழுத்துக்கள் கொண்ட மந்திரம் ஒன்றும் இந்த உபநிஷத்தில் புதைந்திருக்கிறது.

இந்த  ந்ருஸிம்ஹ மந்திரத் திற்கு மந்திரராஜம் என்ற பெயரும் உண்டு. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி; பரமக்குடி சத்தேழு கன்னிமார் கோயிலில் அருள் பாலிக்கும் வராகி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை ... மேலும்
 
temple news
திருவாலங்காடு; திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத தெப்பத் திருவிழா நடந்தது. இதில், ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; நவாமரத்துப்பட்டிபுதூர் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு 16 வகையான ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில், அஹோபிலவல்லி தாயார் உடனுறை பாடலாத்ரி ... மேலும்
 
temple news
சோளிங்கர்; ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது, யோக நரசிம்ம சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar