பதிவு செய்த நாள்
25
மே
2013
11:05
தேனி: தேனி கம்மவார் சங்க பொறியியல் கல்லூரி வளாகத்தில், இன்று நடக்கும் ஸ்ரீனிவாசா- பத்மாவதி தாயார் திருக்கல்யாண உற்சவத்திற்காக, 100 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகின்றன.திருமலா திருப்பதி தேவஸ்தானம், ஸ்ரீ மூகாம்பிகா கல்வி அறக்கட்டளை, தேனி கம்மவார் கல்வி நிறுவனங்கள் இணைந்து, ஸ்ரீவாரி ஸ்ரீனிவாசா- பத்மாவதி தயார் திருக்கல்யாண உற்சவத்தை, தேனி கொடுவிலார்பட்டி கம்மவார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று நடத்துகின்றனர். இதில் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம். நுழைவு கட்டணம் இல்லை, என திருமலா தேவஸ்தானம் அறிவித்துள்ளது.தெய்வத் திருமணத்திற்கு பக்தர்கள் சிரமம் இன்றி வந்து செல்ல, தேனி அரசு போக்குவரத்துக்கழகம், தேனி பஸ்ஸ்டாண்ட், அரண்மனைப்புதூர் விலக்கு, உப்பார்பட்டி விலக்கு ஆகிய இடங்களில் இருந்து 100 சிறப்பு பஸ்களை இயக்குகிறது. தேனியில் இருந்து 5 ரூபாய் கட்டணமும், உப்பார்பட்டி விலக்கில் இருந்து 10 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. எஸ்.பி.,பிரவீண்குமார் அபிநபு தலைமையில், ஏழு டி.எஸ்.பி., க்கள், 35 இன்ஸ்பெக்டர்கள், 70 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.மாலை 6 மணி முதல் இரவு 9.00 மணி வரை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.கலந்து கொள்ளும் அனைவருக்கும் லட்டு பிரசாதம், சுப்பிரபாத புத்தகம், கோவிந்தா நாமாவளி புத்தகம், பெருமாள் தாயார் படங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.