பழநி: பழநி திருப்புகழ் சங்கீத சபா சார்பில், திருஆவினன்குடி கோயிலில் வைகாசி கிரிவிழா நடந்தது. கோயில் இணைக்கமிஷனர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். துணைகமிஷனர் ராஜமாணிக்கம் முன்னிலைவகித்தார். சிவ.ஆறுமுகம் குழுவினரின் பக்தி இன்னிசை, "சுற்றிவந்தால் வெற்றி என்ற தலைப்பில் பக்திசொற்பொழிவு, தென்னாடுடை சிவன், எந்நாட்டவருக்கும் இறைவன் என்ற தலைப்பில் சொல்லரங்கம் நடந்தது. பழநி திருப்புகழ் சங்கீத சபா தலைவர் சங்கர நாராயணன் வரவேற்றார். செயலாளர் சிவ. ஆறுமுகம் நன்றி கூறினார்.