திருப்போரூர்: கந்தசுவாமி கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழா, சிறப்பாக நடைபெற்றது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு, மூலவருக்கு விசேஷ அபிஷேகம் நடந்தது. சென்னை உட்பட பல்வேறு இடங்களில் இருந்து, பக்தர்கள் பிரார்த்தனையாக, அலகு மற்றும் வேல்குத்தி, காவடிகளை எடுத்து, ஊர்வலமாக வந்தனர். விழாவையொட்டி, விசேஷ அபிஷேகம் மற்றும் தீப தூப ஆராதனை நடத்தப்பட்டது.