சிவகிரி: சிவகிரி திரௌபதியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவகிரி திரௌபதியம்மன் கோயிலில் வைகாசி பூக்குழி திருவிழா சிறப்பா நடக்கும். திருவிழா நாட்களில் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது.நேற்று காலை கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் வேதபாராயண முறைப்படி அக்னி வளர்க்கப்பட்டு பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். மாலையில் சுமார் 5.30 மணியளவில் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தது. காப்பு கட்டி பின்னர் மாலையில் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் கோயில் பூசாரி மாரிமுத்து பூ இறங்கி துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து ஆண்களும், பெண்களும் சுமார் 800க்கும் மேற்பட்டோர் அக்னிசட்டி மற்றும் கைகுழந்தைகளுடன் பூக்குழி இறங்கினர். விழாவை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று மஞ்சள் நீராட்டு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் ராமராஜ் தலைமையில் பணியாளர்கள் மற்றும் காப்பு கட்டி மண்டப விழா கமிட்டியார்கள் தனுஷ்கோடி, கிருஷ்ணன், மயில்சாமி, பாண்டியராஜ் செய்திருந்தனர்.