பண்பொழி பேச்சியம்மன் கோயிலில் ஜூன் 7ம் தேதி கொடை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2013 11:05
தென்காசி: பண்பொழி பேச்சியம்மன் கோயில் கொடை விழா ஜூன் 7ம் தேதி நடக்கிறது. செங்கோட்டையை அடுத்த பண்பொழி பேச்சியம்மன் கோயிலில் ஜூன் 7ம் தேதி கொடை விழா நடக்கிறது. அன்று காலை 4 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது. காலை 9 மணிக்கு பால்குடம் எடுத்தல், 10.15க்கு அபிஷேகம், 11.15க்கு உச்சிகால பூஜை மற்றும் தீபாராதனை நடக்கிறது. இதனையடுத்து மதியம் 12மணிக்கு அ ன்னதானம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகிறனர்.