பதிவு செய்த நாள்
27
மே
2013
11:05
தா.பேட்டை: தா.பேட்டை குலாளர் தெருவில் உள்ள செல்வமுத்து மாரியம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அக்குரார்ப்பணம், கணபதி பூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக பூஜை, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் மூன்று கால யாக வேள்விகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். பின்னர் கோவிலில் செல்லமுத்து மாரியம்மனுக்கு இளநீர், பாகனம், தென்னம்பாளை ஆகியவை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. விழாவில், தா.பேட்டை, மேட்டுப்பாளையம், முசிறி, துறையூர், குளித்தலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.