புதுச்சேரி: பள்ளிச்சேரி திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. கண்டமங்கலம் ஒன்றியம், பள்ளிச்சேரி கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதையொட்டி 23ம் தேதி இரவு 7 மணிக்கு அம்மனுக்கு மாவிளக்கு பூஜை மற்றும் கரக திருவிழா நடந்தது. இரவு 10 மணிக்கு திரவுபதை வீரபாஞ்சாலியாக திருவீதி புறப்பாடு நடந்தது. நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு அரவான் களபலி மற்றும் துரியன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இரவு 10 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. காலை 10 மணிக்கு அர்ச்சுனன் பட்டாபிஷேகம் மற்றும் காப்பு களைதல் நடந்தது. ஏற்பாடுகளை கொத்தாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கவிதாகுமார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.