பதிவு செய்த நாள்
27
மே
2013
11:05
ராமேஸ்வரம்: கிராம கோயில் பூஜாரி பேரவை சார்பில், ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில், கடந்த 15 நாட்களாக, கிராம பூஜாரிகளுக்கு ஆகம பூஜா பயிற்சி முகாம் நடந்தது. முகாமில், கிராம கோயிலில் நடத்தும் பூஜை, அபிஷேகம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், தமிழகத்தில் பல பகுதியில் இருந்து, 3 ஆயிரத்து 434 பூஜாரிகள் பங்கேற்றனர். விழாவில், தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் நிறுவனர் வேதாந்தம், தமிழ்நாடு தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நாகசாமி, மாநில துணை தலைவர் ரத்தினசாமி, சுவாமி பரமானந்தா, பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் மாநில தலைவர் ஆளவந்தார் உட்பட பலர் பங்கேற்றனர்.