வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் ரேணுகாதேவியம்மன் கோயில் உற்சவ விழா நடந்தது. எட்டாம் நாள் விழாவை முன்னிட்டு, அம்மன் தர்பார் அலங்கார ஊர்வலம் நடந்தது. காலையில் சிறப்பு அபிஷேகம் முடிந்து, அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் எழுந்தருளினார். மாலையில் பெண்கள் கும்மிப்பாட்டு வழிபாடு முடிந்தவுடன்,அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். பக்தர்கள் வாணவேடிக்கை முழங்க வரவேற்றனர். கோயிலை அடைந்த அம்மனுக்கு, பெண்கள் எதிர்சேவை செய்து வழிபட்டனர்.