தா.பேட்டை: தா.பேட்டை யூனியன் தும்பலம் கிராமத்தில் மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழா முன்னிட்டு காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வந்து அபிஷேகமும், அதைத் தொடர்ந்து அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், மூலமந்திர வேள்வி, அங்குராப்பணம, கடஸ்தானபனம், பூர்ணாஹுதி எந்திரதானம், வாஸ்து சாந்தி, யாக வேள்வி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சியம்மன் கோயில் மற்றும் பரிவார தெய்வங்கள் கோபுர கலசத்திற்கு புனித நீரினை சிவாச்சாரியார்கள் ஊற்றி கும்பாபிஷேக விழாவினை நடத்தினர். விழாவில், தா.பேட்டை, முசிறி, பைத்தாம்பாறை, தும்பலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவினை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். யாக வேள்விகளை முசிறி ரமேஷ் சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்தனர்.