சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. இதற்காக, பல வண்ண பூக்களால் கோயில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று முன் தினம் இரவு 8 மணிக்கு, பூத்தட்டுகளை எடுத்துக்கொண்டு பெண்கள் ஊர்வலம் வந்தனர். பூஜாரி கணேசன் வேதம் முழங்க, அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் நடந்தது. பின், பூ ரதத்தில் அம்மன் எழுந்தருளினார். நிர்வாகிகள் ராஜேந்திரன், முருகேசன், கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரகுமார் செய்திருந்தனர்.