பதிவு செய்த நாள்
04
ஜூன்
2013
10:06
ஓபசமுத்திரம்: ஓபசமுத்திரம் அங்காள பரமேஸ்வரி கோவிலில், தீ மிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. கும்மிடிப்பூண்டி அடுத்த, சுண்ணாம்புகுளம் அருகே, ஓபசமுத்திரம் கிராமத்தில் உள்ளது அங்காள பரமேஸ்வரி கோவில். இக்கோவிலில், இந்த ஆண்டின் தீ மிதி திருவிழா உற்சவம், மே மாதம் 24ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில், ஒவ்வொரு நாளும் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. கடைசி நாளான நேற்று முன்தினம் இரவு, தீ மிதி விழா வெகு விமர்ச்சையாக நடந்தது. சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். ஓபசமுத்திரம், ராக்கம்பாளையம், சென்னாவரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த, 520 பேர் தீ மிதித்து, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.