கம்மாபுரம்: கம்மாபுரம் வீரனார் கோவில், மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.கம்மாபுரம் சப்தகன்னி சமேத வீரனார் கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, விக்னேஸ்வரர், வாஸ்துசாந்தி பூஜையும், மாலை 6:00 மணிக்கு மேல் இரவு 10:00 மணி வரை இரண்டாம் கால பூஜையும் நடந்தது.நேற்று கும்பாபிஷேகத்தையொட்டி, காலை 7:00 மணிக்குமேல் 10:00 மணிக்குள் புனிதநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.