சின்னமனூர்: குச்சனூர் ராஜபாளையத்தில் அங்காள ஈஸ்வரி, கருப்பசாமி கோயில் கும்பாபிஷகம் நடந்தது. முதல் நாளில் சங்கல்பம், விக்னேஷ்வர் பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. இரண்டாம் நாளில் மஹாபூர்ணாஹூதியும், கோயில் விமானம், மூலஸ்தானத்திற்கும் வேத மந்திரங்கள் ஓத மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கம்பம் செல்வகணபதி கோயில் அர்ச்சகர் மணிகண்டன் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது.