திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், நேற்று ஒரே நாளில், 29 பிராத்தனை திருமணங்கள் நடந்தன. திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் வட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு குல தெய்வ கோவிலாகவும் விளங்குகிறது. இதன் காரணமாக சிகை நீக்கி, காதுகுத்தல், காவடி எடுத்தல், எடைக்கு எடை துலாபாரம் பிராத்தனை வழிபாடு நடத்துவதுடன், திருமண நிகழ்ச்சியும் நடத்துகின்றனர்.சமீப காலமாக, முகூர்த்த தினங்களில் 10க்கு குறைவான திருமணங்களே நடந்து வந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம், ஒரே நாளில் இக்கோவிலில் 29 திருமணங்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.