Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » துவாரகா ராமதாசர்
துவாரகா ராமதாசர்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 மார்
2011
12:03

புண்ணிய க்ஷத்திரமான துவாரகா அருகிலுள்ள டாங்கேர் நகரில் வாழ்ந்தவர் ராமதாசர். கிருஷ்ணரை தெய்வமாக ஏற்ற இவர், அப்பெருமானுக்கு அடிமையாகவே வாழ்ந்து வந்தார். பிச்சைப் பாத்திரம் ஏந்தி வீடுவீடாகச் செல்வார். கிடைக்கும் அரிசியை சமைத்து, அடியவர்களுக்கு உணவிட்ட பிறகே சாப்பிடுவார். ஊர்மக்கள் அவருக்கு மகிழ்ச்சியோடு தானம் அளித்து வந்தனர். ஏகாதசி நாளில் துளசி, தீர்த்தம் மட்டும் எடுத்துக் கொள்வார். ஆடி மாத ஏகாதசியன்று, துவாரகை நாதனை தரிசிக்க செல்வது வழக்கம். டாங்கேரில் இருந்து நாம சங்கீர்த்தனம் இசைத்தபடியே, பாதயாத்திரையாக அங்கு செல்வார். கோமதி நதியில் நீராடி ஏகாதசி விரதத்தைத் தொடங்குவார். மறுநாள் துவாதசியில் துவாரகை நாதனை தரிசிப்பார். கண்ணனைக் கண்ட கண்கள் வேறொன்றினைக் காணாது என்பது போல, அவருக்கு அப்பெருமானை விட்டுப் பிரிய மனமிருக்காது. முதுமையை எட்டிய பிறகு, அவரது உடல்நிலை தளர்ந்தது. இருந்தாலும், மனம் தளராமல் தள்ளாடியபடியே துவாரகை சென்றார். அங்கிருந்து கிளம்பும்போது துக்கம் தொண்டையை அடைத்தது.

ஹே! துவாரகநாதா! அடுத்த ஆண்டு ஆடி ஏகாதசியன்று உன் தரிசனத்தை காண்பேனா! ஆயிரமாயிரம் கோபியரிடம் பிருந்தாவனலீலை செய்ய மாயக்கிருஷ்ணனாய் வந்தாயே! இந்த ஏழைக்காக, நான் குடியிருக்கும் டாங்கேருக்கு வரக்கூடாதா?, என்று பொலபொலவென கண்ணீர் சிந்தினார். இதைப் பொறுக்காத துவாரகாநாதன் நேரில் காட்சி அளித்தான்.  ராமதாசா! கவலையை விடு! என்னையும் உன்னுடன் அழைத்துச் செல். உங்கள் ஊரிலும் எழுந்தருள யாம் சித்தமாக உள்ளோம்!, என்று திருவாய் மலர்ந்தார். பகவானே!உன் கருணையே கருணை. நாம் எப்படி செல்வது? என்று கேட்டார். இன்று ஜாமத்தில் கோமதி நதிக்கரையோரம் வந்துவிடு. இருவரும்தேரில்சென்றுவிடுவோம், என்று சொல்லி மறைந்து விட்டார் துவாராகாநாதன். நாமசங்கீர்த்தனம் பாடியபடியே, கோமதி நதிக்கரைக்குச் சென்ற தாசர், ஒரு தேரைக் கண்டார். துவாரகாநாதன் அதில் தங்கச்சிலை வடிவில் அமர்ந்திருந்தான். ராமதாசரும் அதில் ஏறிக்கொள்ள, தேர் தானாகவே டாங்கேர் வந்தடைந்தது.

மறுநாள் பொழுது புலர்ந்ததும், துவாரகாநாதரின் மூலவரின் தங்கச்சிலை காணவில்லை என்ற செய்தி ஊரெங்கும் பரவியது. அர்ச்சகர்களும், அதிகாரிகளும் பதைபதைப்புடன் ஆலோசித்தனர். இரவு பூஜைக்குப் பிறகும் சந்நிதியில் நின்றிருந்த ராமதாசர் மீது சந்தேகம் வலுத்தது. உடனடியாக, அனைவரும் டாங்கேருக்கு புறப்பட்டனர். அதிகாரிகள் வீட்டுக்கு வருவதை அறிந்த தாசர், சிலையைத் தூக்கிக் கொண்டு கிணற்றடிக்கு ஓடினார். சிலையை வாளிக்குள் வைத்து கிணற்றுக்குள் தள்ளினார். ஆனால், வாளி தண்ணீருக்குள் மூழ்காமல் பாதி கிணற்றிலேயே நின்றதைஅவர் கவனிக்கவில்லை. அர்ச்சகர்கள் அவரது வீடு முழுக்க தேடிமுடித்தனர். பின் கிணற்றை சோதனையிட்ட போது, அங்கே சிலை மினுமினுத்ததைக் கண்டு தூக்க ஆயத்தமாயினர். தாசருக்கு பகவானை விட்டுப் பிரிய மனமில்லை. குழந்தையைப் போல அழத் தொடங்கினார். அர்ச்சகர்களோ, செய்வதையும் செய்து விட்டு பக்திமான் போல் அழுகிறீரா? எனச்சொல்லி அவரை உதைக்கவும் தயங்கவில்லை.

அவ்வூர் மக்களோ, ஐயா! இப்பெரியவரை துன்புறுத்தாதீர்கள். உங்களுக்கு தேவை சிலை தானே! அதை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக கிளம்புங்கள்!, என்றனர். இந்தக் கிழம் செய்த காரியத்துக்கு இதற்கு ஆதரவாக வேறு பேசுகிறீர்களா! சாமான்யபட்ட சிலையா இது! சொக்கத்தங்கத்தால் ஆனது ! என்று ஆவேசமாக கத்தினர். தாசர் அவர்களிடம், உங்களுக்குப் பொன் தானே வேண்டும். வேண்டுமளவுக்கு நான் தருகிறேன். சிலையை என்னிடம் கொடுத்துவிடுங்கள், என்று கெஞ்சினார். ஊர் மக்களும் தாசரின் பேச்சை ஆமோதித்தனர். தங்கம் தான் பெரிதென்று எண்ணும் உங்களுக்கு தங்கம் கொடுத்தால் போதாதா? தங்கத்தை வாங்கிக் கொண்டு சிலையை இங்கே விட்டு செல்லுங்கள்!, என்று வாதம் செய்தனர். பிச்சை எடுத்து பிழைக்கும் இவரிடம் தங்கம் ஏது என்ற எண்ணத்தில், தராசில் இச்சிலையை வைத்து எடைக்கு எடை தங்கம் கொடுத்தால் போதும். நாங்கள் கிளம்பிவிடுகிறோம். சிலையை நீங்களேவைத்துக் கொள்ளுங்கள், என்று அர்ச்சகர்கள் நிபந்தனை இட்டனர்.

தராசில் சிலை வைக்கப்பட்டது. தாசரின் வீட்டில் தங்கம் ஏதுமில்லை. மனைவியின் ஞாபககார்த்தமாக ஒரு மூக்குத்தியை மட்டும் வைத்திருந்தார். அதை எடுத்து வந்தார். அதைக் கண்ட அர்ச்சகர் ஒருவர், இந்த கிழத்திற்கு பைத்தியம் பிடித்துவிட்டது போலும், என்று சொல்ல அனைவரும் சிரித்தனர். மறுதட்டில் மூக்குத்தியை வைத்த தாசர் கண்ணை மூடி பகவானை வணங்கினார். தராசின் இருதட்டுகளும் சரிசமமானது. தாசரின் பக்திக்கு கட்டுப்பட்டு தராசு நிற்பதைக் கண்ட அர்ச்சகர்களும், அதிகாரிகளும் சிலையாயினர். சிலையை தாசரிடம் கொடுத்து விட்டு, துவாரகை கிளம்பினர். அதன்பின், அந்த இல்லமே கோயிலாக மாறியது. ராமதாசரும் சங்கீர்த்தனம் பாடி துவாரகைநாதனை தினமும் வணங்கி மகிழ்ந்தார்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar