ராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயில், ஆனிப்பெருந்திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில் விழா கொடியேற்றை தொடர்ந்து, சுவாமி மற்றும் அஞ்சல்நாயகி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பத்து நாள் நடக்கும் விழாவில், மாலையில் சுவாமி, அம்மன், பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடக்கிறது. ஏழாம்நாள் விழாவன்று இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாணம், ஒன்பதாம்நாள் காலை 10.30 மணிக்கு, தேரோட்டம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி வேல்முருகன் மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.