பதிவு செய்த நாள்
15
ஜூன்
2013
10:06
திருமலை- திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு, கடந்த, இரண்டு ஆண்டுகளில், 44 கோடி ரூபாச நன்கொடையாக கிடைத்துள்ளது என, தேவஸ்தான நன்கொடை அலுவலக அதிகாரி ராஜேந்திரா தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: தாங்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு, அடிப்படை சலுகைகள் கிடைப்பதை அறிந்து, பக்தர்கள் பலர் நன்கொடை அளிக்கின்றனர். 10 லட்சம் ரூபாசக்கு மேல் நன்கொடை வழங்கிய, 179 பேருக்கு, 5 கிராம் தங்கம் நாணயமும், 5 லட்சம் ரூபாசக்கு மேல் நன்கொடையும் வழங்கிய, 245 பேருக்கு, வெள்ளி நினைவு பரிசும், தேவஸ்தானம் மூலம் வழங்கப்படுகிறது. மேலும், தேவஸ்தான காலண்டர் அச்சடிக்கும் இயந்திரத்தை, ஜப்பானில் இருந்து வரவழைக்க, பக்தர் ஒருவர், 65 லட்சம் ரூபாயை நன்கொடையாக அளிக்க உள்ளார். இதனால், இனி தேவஸ்தான காலண்டர்களுக்கு தட்டுப்பாடு இருக்காது. நன்கொடை வழங்கும் அலுவலகமும், தற்போது உள்ள இடத்தில் இருந்து, ஆதிசேஷு விருந்தினர் மாளிகையில், குளிர் சாதன வசதியுடன் கூடிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர்