பதிவு செய்த நாள்
15
ஜூன்
2013
10:06
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில், கல்மண்டபம் அமைப்பதற்கான பணிக்காலம் முடிவடைந்த நிலையில், பணியாளர் பற்றாக்குறையாலும் திருப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சன்னதி அருகே உள்ள கல் மண்டபம், நீண்ட நாட்களாக பணி நிறைவு பெறாமல் இருந்தது. இதை தொடர்ந்து தலா 50 லட்சம் ரூபாயில், கல் மண்டபம் கட்ட இரு பிரிவாக, சில மாதங்களாக துரிதமாக நடந்து வந்த பணி தற்போது கல் செதுக்கும் சிற்பிகள் பணிக்கு வராததால், ஒரு மாதமாக நடக்கவில்லை.ஒப்பந்ததாரர் வேல்முருகன் கூறுகையில், ""கல் செதுக்கும் பணியாளர்களுக்கு, பெங்களூருவில் நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. இங்கு பணிபுரிந்த பலர், அங்கு சென்று விட்டனர். அதே சம்பளத்திற்கு அழைத்து வந்தாலும், இங்கு நிலவும் குடிநீர் பற்றாக்குறையை காரணம் காட்டி, ஒரே வாரத்தில் திரும்பிச் சென்று விடுகின்றனர். விரைவில் பணி துவக்க முயற்சி எடுக்கப்படும், என்றார்.