பதிவு செய்த நாள்
17
ஜூன்
2013
10:06
திருக்கோவிலூர்: திருவண்ணாமலை, யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், மகா கும்பாபிஷேக, ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழா, நாளை துவங்குகிறது. திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், ஒன்பதாம் ஆண்டு மகா கும்பாபிஷேக நிறைவு விழா, இரண்டு நாட்கள் நடக்கிறது. முதல் நாள் (18ம் தேதி) நிகழ்ச்சியாக, நாளை காலை, 6:30 மணிக்கு, ஹோமம், 10:45 மணி முதல், 12:45 மணி வரை, பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி பக்தர்கள், கருத்துகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். மாலை, 4:00 மணிக்கு, மயிலை சற்குருநாதன் ஓதுவார் மற்றும் குழுவினரின் தேவாரம், 5:45 மணிக்கு, ஸ்ரீமதி சாரதா ஸ்ரீ கரன் குழுவினரின், இசை கச்சேரி நடக்கிறது.அடுத்த நாள், 19ம் தேதி காலை, 7:00 மணிக்கு, மகா அபிஷேகம், 11:45 மணிக்கு பக்தர்களின் பஜனை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, ஸ்ரீ மதி சவிதா ஸ்ரீ ராம் குழுவினரின் அபங்கம் மற்றும் பஜனை நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு பகவான் வெள்ளி ரதத்தில் ஊர்வலம், ஆரத்தி நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, ஆஸ்ரம நிர்வாகி, ஜஸ்டிஸ் டி.எஸ்.அருணாசலம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.