பதிவு செய்த நாள்
17
ஜூன்
2013
10:06
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆனி ஊஞ்சல் திருவிழா ஜூன் 23ல் நிறைவடைகிறது. திருவிழா நாட்களில் இரவு 7 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடாகி, திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து, அங்குள்ள ஊஞ்சலில் எழுந்தருளுவர். 30 நிமிடங்கள் ஊஞ்சல் ஆட்டம் நடக்கும். ஜூன் 23 அன்று உச்சிகால பூஜையின்போது, மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை, உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு மா,பலா,வாழை முக்கனிகள் படைக்கப்பட்டு பூஜைகள் நடக்கும்.