சுந்தரேசபுரம் சுப்ரமணியர் கோவிலில் வரும் 21ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2013 11:06
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த சுந்தரேசபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட பழமையான சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 21ம் தேதி நடக்கிறது. திருக்கோவிலூர் அடுத்த சுந்தரேசபுரத்தில் பழமையான சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. இதனை புதுப்பித்து மகா கும்பாபிஷேகம் வரும் 21ம் தேதி நடக்கிறது. இதனையடுத்து இன்று காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், மாலை 5 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக 21ம் தேதி காலை 6 மணிக்கு நான்காம்கால பூஜை, மகா பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி 10.20 மணிக்குமேல் 10.30 மணிக்குள் மூலகலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.