Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாகம் தீர்ந்ததடி தங்கமே! நாளை.... நாளை... என்று இன்றை இழக்காதே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கடவுளை அறியாதவன் எதற்கு சமம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2013
03:06

கங்கைக்கரையோரம்  ராமகிருஷ்ணர் சீடர்களுக்கு தத்துவ உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவரது சீடர் விவேகானந்தர், குருநாதரின் வாய் அசைவை  உன்னிப்பாக  கவனித்துக் கொண்டிருந்தார்.  திடீரென அவர்களின் கவனம் திருப்பும் விதத்தில், நாய்கள் வேகமாகக் குரைத்தன. குப்பைத் தொட்டியில் கிடந்த எலும்பைக் கவ்விக்கொண்டு ஒரு முரட்டு நாய் வெளியில் குதித்து ஓடியது. அந்த நாயைச் சுற்றிக்கொண்ட மற்ற நாய்கள் வேகமாகக் குரைத்தன. முன்பற்கள் தெரிய  ஆக்ரோஷமாக நாய்கள்  குரைப்பதை முரட்டு நாய் சட்டை செய்யவே இல்லை. வாயிலிருக்கும் எலும்பைச் சுவைக்க வேண்டும்  என்பதிலேயே அதன் கவனம் இருந்தது. இதைக்கண்ட ராமகிருஷ்ணர் தன் சீடர்களிடம், இந்த நாயிடமிருந்து என்ன தெரிந்து கொள்கிறீர்கள்?, என்றார். ஆளுக்கொரு பதிலைச் சொன்னார்கள்.ஒரு சீடர், நாய்களின் இயல்பு இதுதானே. மற்ற நாய்கள் பார்த்திருக்க ஒரு நாய் தின்று கொண்டிருக்கும், என்றார். வலிமை தான் எப்போதும் ஜெயிக்கும். வலிய நாய் ஜெயித்து விட்டது அவ்வளவே, என்றார் மற்றொருவர். எதிலும் முந்தியவர்க்கே  முதன்மை. முரட்டுநாய்எலும்பை எடுப்பதில் முந்திக் கொண்டது, என்றார் மூன்றாமவர். விவேகானந்தரோ தத்துவரீதியாக இந்த காட்சியை விவரித்தார். நாய் அமைதியாக உணவைச் சுவைப்பது போல, கடவுளை அறிந்த ஞானிகளும் அமைதியில் ஒன்றி  விடுவார்கள். உணவு கிடைக்காத மற்ற நாய்கள் குரைப்பதைப் போல, கடவுளை அறியாதவர்கள் மட்டுமே, அவரைப் பற்றி எதையாவது பிதற்றிக் கொண்டு எல்லாம் தெரிந்தவர்கள் போல் ஆரவாரம் செய்வார்கள், என்றார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar