மழை வேண்டி மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் வருண யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2013 10:06
நாட்டில் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் மழையின் அளவு மிகவும் குறைந்து விட்டது. இதனால் வறட்சி அதிகரித்து விட்டது. இதனால் மழை பெய்யவும், நாட்டில் விவசாயம் செழிக்கவும் மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் நேற்று மழை வேண்டி வருண பகவானுக்கு யாகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் பலர் காலை 6 முதல் மதியம் வரை இந்த யாகத்தினை சிறப்பாக நடத்தினர். பக்தர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். வருண யாகம் நடந்து கொண்டிருந்த நேரத்திலேயே மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.