திருப்பூர்: மாநிலம் முழுவதும் உள்ள பெரிய கோவில்களில், மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்த அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் மற்றும் சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில்களில், வரும் 28ம் தேதி, சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. அன்று, வருணபகவானுக்கான சிறப்பு ஹோமமும் நடத்தப்படும். விஸ்வேஸ்வரர் கோவிலில், அதிகார நந்தியை சுற்றிலும், தண்ணீர் தொட்டிகட்டும் பணி நடந்து வருகிறது. அதில், தண்ணீர் நிரப்பி பூஜை செய்யப்படும். அதன்பின், தொட்டி இடிக்கப்படும்.