தேவர்குளம்: வி.ரெட்டியார்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஓவுராஜ பெருமாள் கோயிலில் வரும் 28ம் தேதி வருஷாபிஷேக விழா நடக்கிறது. சங்கரன்கோவில் மெயின்ரோட்டில் வி.ரெட்டியார்பட்டி என்ற மேசியாபுரம் கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஓவு ராஜபெருமாள் கோயிலில் உள்ளது. பழமைவாய்ந்த இக்கோயிலில் பல்வேறு திருப்பணி வேலைகள் நடந்தன. இதையடுத்து கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதன் ஓராண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு முதலாமாண்டு வருஷாபிஷேகம் வரும் 28ம் தேதி நடக்கிறது. இதைமுன்னிட்டு வரும் 27ம் தேதி பகவத் பிரார்த்தினை, சங்கல்பம், புண்ணிய வாசனம், பூமி பூஜை, முதல்கால யாகசாலை பூஜை, அலங்காரம், அபிஷேகம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு கருடாழ்வார் வாகனத்தில் சப்ர வீதிஉலா நடக்கிறது. 28ம் தேதி, 2ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. தொடர்ந்து விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடத்தப்படுகிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை தர்மகர்த்தா சோம சுந்தரம் மற்றும் கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.