பதிவு செய்த நாள்
26
ஜூன்
2013
11:06
விழுப்புரம்: சிறுவந்தாடு கிராமத்தில் திரவுபதியம்மன், அய்யப்பன் சுவாமி கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி, கடந்த 19ம் தேதி மாலை 5 மணிக்கு பகவத் பிராத்தனை, முதல்கால வேள்வி துவக்கம், ஹோமம் பூர்ணாஹூதி நடந்தது. பின், 20ம் தேதி காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்விகள் மற்றும் மாலை 5 மணிக்கு மகாசாந்தி திருமஞ்சனம், மூன்றாம் கால யாக வேள்விகள் நடந்தன.நேற்று காலை 6 மணிக்கு, கோ பூஜை, சுப்ரபாதம், நான்காம் கால யாகவேள்விகள், மகா பூர்ணாஹூதி நடந்தது. பின், காலை 9 மணிக்குமேல் 10.30 மணிக்குள் சிம்ம லக்கனத்தில், விமான கருவறை மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின், மதியம் 1.30 மணிக்கு மேல் திரவுபதியம்மன் திருக்கல்யாணமும், மாலை 6 மணிக்கு சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.