பதிவு செய்த நாள்
26
ஜூன்
2013
11:06
நாமக்கல்: இளநகர் சுற்றுவட்டார கிராம மக்கள், மழை வேண்டி உடைந்த அம்மி, ஆட்டுக்கற்களை, கிராம எல்லையில் குவித்து வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும், கிராமப்புறங்களில் மழை வேண்டி பல்வேறு நூதன வழிபாடுகளை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், இளநகர் சுற்றுவட்டார கிராம மக்கள், மழை வேண்டி நூதன வழிபாடு ஒன்றை கடைபிடித்துள்ளனர். கிராமப்புறத்தில், கோவில் உள்ள பொது இடத்தில் அம்மி மற்றும் ஆட்டுக்கல் வைக்கப்படும். அவற்றில் உடைந்த அம்மி, ஆட்டுக்கல் இருந்தால், அவை கிராமத்தில் சுபிட்ஷத்தை ஏற்படுத்தாது, என்ற நம்பிக்கை கிராம மக்கள் மத்தியில் நிலவுகிறது. அவற்றை அகற்றினால், மழைப்பொழிவு ஏற்படும் எனவும், கிராம மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதன்படி, உடைந்த அம்மி, ஆட்டுக்கற்கள் கிராம எல்லையில் போடப்படும். இளநகர் சுற்றுவட்டார கிராம மக்கள் மழைவேண்டி, உடைந்த அம்மி, ஆட்டுக்கற்களை கிராம எல்லையில் ஒன்றாக கொட்டி குவித்து வைத்துள்ளனர்.