கடையநல்லூர்: பண்பொழி சிவன் கோயிலில் மலை வேண்டி நாளை (27ம் தேதி) வருண ஜெபம் நடக்கிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் மழை பெய்து நாடு வலம்பெற்றிட வருண ஜெபம் நடத்திட இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. சிவாலயங்களில் இதற்கான வருணஜெபம் நடத்திட பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான பண்பொழி நகருக்குள் அமைந்துள்ள அறம்வளர்த்தநாயகி சமேத நகரீஸ்வரமுடையார் கோயிலில் வருண ஜெபம் நாளை (27ம் தேதி) நடக்கிறது. இதற்கான கலசகுண்டங்கள் அமைக்கும் பணி சிவன்கோயில் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருண ஜெபத்திற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் உதவி ஆணையர் கார்த்திக் மற்றும் கோயில் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.