பதிவு செய்த நாள்
28
ஜூன்
2013
10:06
நிலக்கோட்டை: சிலுக்குவார்பட்டியில் புக்கனப்பள்ளிவார் பங்காளிகள் குலதெய்வமான ஸ்ரீதேவி, பூமாதேவி, ஸ்ரீவெங்கடேசப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. சிலுக்குவார்பட்டியில் பட்டாளம்மன் சாமி கும்பிடும், பிரம்மகுல சாலியவாகன தெலுங்கு குலாலர் புக்கனப்பள்ளிவார் பங்காளிகள் குலதெய்வமான ஸ்ரீதேவி, பூமாதேவி, ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயில் திருப்பணிகள் நடந்தது. நேற்று யாக சாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. சுதர்சன, மகாலட்சுமி ஹோமம், கருடாள்வார் திவ்ய பிரபஞ்சத்துடன் முதல் கால யாக பூஜை நடந்தது. இன்று காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாடல், கோமாதா பூஜையுடன் கடம் புறப்படுகிறது. காலை 8 மணிக்கு புதிதாக கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. புக்கனப்பள்ளிவார் பங்காளிகள் சார்பில் அன்னதானம் நடக்கிறது. சிலுக்குவார்பட்டி, காணப்பாடி, புதுப்பட்டி, குள்ளச்சேர்வைக்காரன்பட்டி, சிலுவத்தூர், மணியகாரன்பட்டி, பூதிப்புரம், மீனாட்சிபுரம், கொட்டத்துரை, மதுரை, திண்டுக்கல், கோவை, போடி, குள்ளனம்பட்டி, கோப்பம்பட்டி, கரிவாடன்செட்டிபட்டி, பாறைப்பட்டி, மாலைப்பட்டி, எட்டிகுளத்துப்பட்டி, பிள்ளையார்நத்தம், செம்மினிப்பட்டி, சொக்கன்செட்டிபட்டி, வேம்பார்பட்டி, தாதிநாயக்கன்பட்டி, ராமன்செட்டிபட்டி, கம்பம், வடமதுரை, திருப்பூர், திருநெல்வேலி, தேனி, சென்னை, காவேரிநகர், கொசவபட்டி, திருச்சி, ஆண்டிசெட்டியூர் பங்காளிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.