தத்ரூபமாக அமைக்கப்பட்ட காசி விஸ்வநாதர் லிங்க தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2013 10:07
கும்மிடிப்பூண்டி: பிரம்மா குமாரிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, காசி விஸ்வநாதர் தரிசனத்தை ஏராளமானோர் கண்டு தரிசித்தனர். பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் ராஜயோக தியான நிலையம் சார்பில், கவரைப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில், காசியில் இருப்பது போன்று தத்ரூபமாக அமைக்கப்பட்ட காசி விஸ்வநாதர் லிங்க தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரு தினங்கள் நடந்த நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். காசி விஸ்வநாதர் தரிசனத்துடன் ஆன்மிகம், தியானம், ஆத்மா தொடர்பான பட விளக்கம், செயல் முறை மற்றும் திரை விளக்கங்கள் தொகுத்து வழங்கப்பட்டன.