சாளக்கிராம வழிபாடு நடத்தும் வீட்டில் விஷ்ணுவின் சாந்நித்யம் நிலைத்திருக்கும். தினமும் தண்ணீர், பால் இரண்டிலும் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர், பட்டு வஸ்திரத்தால் அதனை ஒற்றிவிட வேண்டும். கல்கண்டு சேர்த்துக் காய்ச்சிய பால் நிவேதனம் செய்யவேண்டும். விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்யலாம்.