பதிவு செய்த நாள்
02
ஜூலை
2013
11:07
காங்கயம்: சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 1.5 லட்சம் செலவில் கண் காணிப்பு கேமரா, அலாரம் பொருத்தப்பட்டது. சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விலை மதிப்பற்ற சிலைகள், நகைகள் உள்ளதால், கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கோவிலுக்கு வருபவர்களை கண்காணிக்க, முன்மண்டபத்தில் இரண்டு கேமரா, சுற்றுப்பிரகாரத்தில் ஐந்து கேமரா என ஏழு கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளன. கேமரா காட்சிகளை, கோவில் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் திரையில் கண்காணிக்க முடியும். 24 மணி நேரமும் செயல்படும் வகையில், "இன்ப்ரா ரெட் வகை கேமராக்களாக உள்ளதால், இரவு நேரங்களிலும் படம் தெளிவாக பதிவாகும்.
இரவு நேரங்களில் கோவிலுக்குள் யாரும் நுழைந்து, திருட முயற்சித்தால், அலாரம் அடிக்கும் வகையில், இரண்டு அலாரம் அமைப்பும், 20 கி.மீ., தூரம் ஒலிக்கும் வகையில், பெரிய அளவில் அபாய சங்கும் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் அதிகாரிகள் கூறுகையில், "கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. அலாரம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள், உபயதாரர்கள் உதவியுடன் 1.5 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள் ளன. இரவு நேரங்களிலும் தெளிவாக படம் பிடிக்கும் திறனுள்ள கேமரா உள்ளதோடு, ஆறு மாதம் வரை கம்ப்யூட்டரில் வீடியோ பதிவும் இருக்கும். மேலும், ஒன்பது இடங்களில் கேமரா பொருத்த உள்ளோம், என்றனர்.