கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த ஏ.வல்லியம் மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா வரும் 8ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு கடந்த 21ம் தேதி காலை 9:00 மணிக்கு காப்பு கட்டு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தினமும், அபிஷேக ஆராதனை, இரவு அம்மன் வீதியுலா, மகாபாரத கதைப் பாட்டு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. வரும் 8ம் தேதி காலை 8:00 மணிக்கு அரவாண் கடபலி, மாலை 3:00 மணிக்கு படுகளம் நிகழ்ச்சி, மாலை 5:00 மணியளவில் தீமிதி உற்சவம் நடக்கிறது. 9ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.