பதிவு செய்த நாள்
02
ஜூலை
2013
11:07
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில், சித்ரா கோபிநாத் நாட்டியாலயா பரதப் பள்ளி மாணவிகளின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. காரைக்கால் அம்மையார் கோவிலில், மாங்கனி திருவிழாவைத் தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு, பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. கோவில் மணிமண்டபத்தில் 30 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில், நேற்று முன்தினம் சித்ரா கோபிநாத் நாட்டியாலயா பரதப் பள்ளி சார்பில் நாட்டியஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. நாட்டிய பள்ளியை சேர்ந்த 65 மாணவிகள் கலந்து கொண்டு, விநாயகர் ஸ்துதி, சிவன்ஸ்துதி, ஆண்டாள் நடனம், கண்ணன் நடனம், கால்களால் சிங்கம், புலி, மயில் வரையும் சித்திர நடனம் உள்ளிட்ட நாட்டியங்களை ஆடினர். நிகழ்ச்சிக்கு, நாட்டியாலயா அகாடமி இயக்குநர் சித்ரா கோபிநாத் தலைமை தாங்கினார். கேசவசாமி, சுப்பையா, மாவட்ட கலைஞர்கள் மாமன்ற தலைவர் ஹாஜாமொய்தீன், துணைத் தலைவர் தங்கவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர். கோபிநாத் நன்றி கூறினார்.