காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே பழைமையான சிவன் கோவிலில், கும்பாபிஷேகம் நடத்த கால்கோல் விழா நடந்தது.காரிமங்கலம் அடுத்த அடிலம் பஞ்சாயத்தில் பழமையான சிவன் கோவில் ஊர்பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முயற்சியின் காரணமாக சீரமைக்கப்பட்டு, கோவிலில் பூஜைகள் நடந்து வருகிறது. கோவிலை முழுமையாக புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான கால்கோல் விழா நடந்தது.கோவை மணிவாசகர் அருட் பணி மன்றம் மற்றும் சிவனடியார்கள் முன்னின்று விழாவை நடத்தினர். விழாவையொட்டி சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.