பதிவு செய்த நாள்
03
ஜூலை
2013
11:07
நாமக்கல்: ராமாபுரம்புதூர் லட்சுமி ஹயக்ரீவர், சுதர்ஸனர் கோவிலில் ஜூலை, 14ம் தேதி, மகா சம்ப்ரோஷண விழா நடக்கிறது.நாமக்கல் ராமாபுரம்புதூரில், லட்சுமி ஹயக்ரீவர், சுதர்ஸனர், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் உள்ளன. இக்கோவில் திருப்பணி, மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து, ஜூலை, 14ம் தேதி, கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை, 12ம் தேதி காலை, 8.30 மணிக்கு, சுதர்ஸன ஹோமத்துடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து மாலை, 6.30 மணிக்கு புண்யாகம், பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், மகாசாந்தி கும்பஸ்தாபனம், நித்ய ஹோமம் இரவு, 9.30 மணிக்கு, பூர்ணாகுதியும் நடக்கிறது.ஜூலை, 13ம் தேதி காலை, 8 மணிக்கு, அக்னிப்ரணயனம், நித்ய, மகாசாந்தி மற்றும் அதிவாச ஹோமம் நடக்கிறது. மாலை, 5 மணிக்கு, மகா சாந்தி சிறப்பு அபிஷேகம், 6 மணிக்கு, புண்யாகம், சயனாதி வாசம், மூர்த்தி ஹோமம் நடக்கிறது. ஜூலை, 14ம் தேதி காலை, 7 மணிக்கு, நித்ய, தாரா ஹோமம், கும்பப்பிராயாணம் நடக்கிறது.அதை தொடர்ந்து, காலை, 9.30 மணிக்கு, விமான குடமுழுக்கு விழாவும், 10 மணிக்கு சக்ரத்தாழ்வார், லட்சுமி ஹயக்ரீவர், செல்வ கணபதி, தட்சிணாமூர்த்தி, கருடாழ்வார், ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்திகளுக்கு சம்ப்ரோஷணமும் நடக்கிறது. விழாவில், பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.