நாறும்பூநாத சுவாமி கோயிலில் 14ம் தேதி மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2013 11:07
வீரவநல்லூர்: திருப்புடைமருதூர் கோமதி அம்பாள் உடனுறை நாறும்பூநாத சுவாமி கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வரும் 14ம் தேதி நடக்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் முதன்மை பெற்றதும், கருணை ஆறும் பொருநை ஆறும் கலக்குமிடத்தில் அழகுற அமைந்துள்ள திருப்புடைமருதார் நாறும்பூநாதசுவாமி கோயிலில் வரும் 14ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்க இருப்பதை முன்னிட்டு கோயில் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றது. ராஜகோபுரம், வண்ணம் தீட்டப்பட்டு மிளிர்கிறது. யாகசாலையும் அமைக்கும் பணி நிறைவு பெற்றது. வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி காலை வரை யாகசாலை பூஜைகள் நடக்கிறது.தொடர்ந்து காலை 9 மணி முதல் 10 மணிக்குள் கோமதிஅம்பாள் உடனுறை நாறும்பூநாதர் மூலஸ்தானம், பரிவார விமானங்கள் மற்றும் ராஜகோபுரம் கும்பாபிஷேகம், தொடர்ந்து மூலஸ்தானம், பரிவார மூர்த்திகள், மகா கும்பாபிஷேகம் அடுத்து மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. கும்பாபிஷேகம் காணவரும் பக்தர்களின் வசதிக்காக வீரவநல்லூர், முக்கூடல், நெல்லையிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஏற்பாடுகளை சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் அறிவுரையின் பேரில் நடக்கிறது.