திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், நேற்று கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. ஆனி மாத கிருத்திகை விழா, நேற்று நடந்தது. இதையொட்டி, சிறப்பு அர்ச்சனை மற்றும் காவடி ஊர்வலம் நடந்தது. அதிகாலை 3:00 மணிக்கு துவங்கி, ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து, சரவண பொய்கையில் நீராடி கந்தனை வழிபட்டனர். விழாவில் பங்கேற்க வந்த பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் மூலம் அன்னதானம் வழங்கப்பட்டது. மூலவர் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.