பதிவு செய்த நாள்
05
ஜூலை
2013
11:07
சிவகிரி: வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாதர் கோயிலில் மழை வேண்டி வருண ஜெப வேள்வி நடந்தது. தமிழக முதல்வர் உத்தரவுப்படி மழைவேண்டி இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ள இக்கோயிலில் மழைவேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. பர்ஜன்யசாந்தி, வருண ஜெப வேள்வியும், நந்தி பெருமானுக்கு நீர்த்தொட்டி கட்டி வைத்து கழுத்து அளவிற்கு நீர் தேக்கி பூஜைகள் செய்யப்பட்டது. சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 7ம் திருமறையும், மழைப்பதிகம், திருஞான சம்பந்தர் இயற்றிய 12ம் திருமறையும் ஓதுவார்கள் ஓதினர். மேகராச குருச்சி பண் இசைக்கப்பட்டது. நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வாத்தியங்களுடன் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி, ஆனந்த பைரவி, ரூபகல்யாணி போன்ற ராகங்களால் மழை வேண்டி இசைக்கப்பட்டது. பல்வேறு பூஜைகள், சிறப்பு அலங்கார அர்ச்சனைகள் நடந்தது.ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் அழகுலிங்கேஸ்வரி, எழுத்தர் பக்கீர்சாமி உட்பட கோயில்பணியாளர்கள் செய்திருந்தனர்.