பதிவு செய்த நாள்
09
ஜூலை
2013
10:07
தண்டலம்: தண்டலம் செல்லியம்மன் கோவிலில், ஏழு ஆண்டுகளுக்கு பின், நாளை (10ம் தேதி) தேர் திருவிழா துவங்கி, மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. திருப்போரூர் அடுத்த தண்டலத்தில், பழமை வாய்ந்த செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஐந்து அல்லது ஏழு ஆண்டுகள் இடைவெளியில், தேர் திருவிழா விமர்சையாக நடைபெறும். அதன்படி, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு பின், நாளை இரவு, 9:00 மணிக்கு, தேர் திருவிழா துவங்குகிறது. அதை தொடர்ந்து, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில், வீதி உலா, வாண வேடிக்கை முழங்க, மேள தாள வாத்தியங்களுடன் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, கடந்த 3ம் தேதி காப்பு கட்டுதலும், 7ம் தேதி, தேர் அறிவிப்பு வெளிசந்தி ஓடுதலும் நடந்தது. இன்று இரவு, 9:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், அண்ணமார் பூஜை நடைபெறுகிறது.