பதிவு செய்த நாள்
09
ஜூலை
2013
10:07
சேலம்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே ஆதிகருமாபுரம் செல்லாண்டி அம்மன், சேலம் பொருளீந்தகுலப்பங்காளிகள் பாத்தியப்பட்ட செல்லாண்டி அம்மன், மாரியம்மன், அத்தனூர் அம்மன், சிவகாமி அம்மன் உடனுறை பாண்டீஸ்வரர், சென்றாய பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம், ஜூலை,15ல் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஜூலை,11ல் கிராம சாந்தி பூஜைகள் துவங்குகிறது. 12ம் தேதி காலை, மஹாகணபதி வேள்வி, நவகோள் வழிபாடு, குபேர வைபவ லட்சுமி கேள்வி, நிறைஒளி வழிபாடு, பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை, மங்கள இசை, விநாயகர் வழிபாடு, யஜமான சங்கல்பம், புண்யாஹம், நலத்தூய்மை வழிபாடு, ரஷேக்ண ஹோமம் நடக்கிறது.ஜூலை, 13ம் தேதி காலை, துர்க்கை லட்சுமி சரஸ்வதி வேள்வி, சேலம் பொருளீந்த குலப்பங்காளிகள் காவிரியாற்றில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வரப்புறப்படுதல், பசு, குதிரை, யானை கேரள செண்டை மேளம், மேளதாளத்துடன் காவேரி புனித தீர்த்தம், முளைப்பாரிகை அழைத்து வரப்படுகிறது. மாலை, விநாயகர் வழிபாடு, மிருத்சங்கிரஹணம், அங்குரார்பனம், காப்பு கட்டுதல், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேஷம், முதற்கால யாக வேள்வி ஆரம்பம், திரவ்யஹூதி ஆகியவை நடக்கிறது.ஜூலை, 14 காலை, விசேஷசந்தி, பூதசுத்தி, இரண்டாம் கால யாகவேள்வி, திரவ்யஹூதி, மாலையில், கோபுரகலசம் வைத்தல், விமானம் கண் திறப்பு, மூன்றாம் கால யாகவேள்வி, திரவ்யஹூதி, யந்திரஸ்தாபனம், எண்வகை மருந்து சாற்றுதல் ஆகியன நடக்கிறது.ஜூலை, 15ம் தேதி காலை, மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு, பிம்பசுத்தி, காப்பு அணிவித்தல், நாடீசந்தானம், ஸ்பர்ஷஹூதி நான்காம் கால யாக வேள்வி துவக்கம், திரவ்யிய ஹோமம், யாத்ராதானம், அருட்சக்தி கலசங்கள் புறப்படுதலை தொடர்ந்து விமானம், கோபுரம் கும்பாபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து செல்லாண்டி அம்மன், மூலவர், பரிவார தெய்வங்களுக்கு மஹாகும்பாபிஷேகம் நடக்கிறது. உடன் தசதரிசனம், மஹா அபிஷேகம், தசதானம், மஹா பூஜை, தீபாராதனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை, ஆதிகருமாபுரம் செல்லாண்டி அம்மன் சேலம் பொருளீந்தகுலப்பங்காளிகள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.