மாதங்களில் தை சிறப்பானது. இம்மாதத்தில், சூரியன் தன் வட திசைப்பயணத்தை தொடங்குகிறார். உத்தராயண புண்ணிய காலம் தையில் தொடங்குகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் பழமொழி இதன் சிறப்பை உணர்த்தும். திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற சுபவிஷயங்கள் இம்மாதத்தில் அதிகம் நடப்பதில் இருந்து அறிய முடியும்.